டிரம்பின் பயணத் தடை: உலகளவில் எதிர்ப்புகள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

டிரம்பின் பயணத் தடை: உலகளவில் எதிர்ப்புகள்

ஏழு முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்கா வருவதற்கு தான் விதித்துள்ள தற்காலிகத் தடையை அதிபர் டிரம்ப் நியாயப்படுத்தியுள்ளார்.

அந்தத் தடைக்கு எதிராக சர்வதேச அளவில் போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில் அதில் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் நிரந்தரமாகத் தங்கும் உரிமை உள்ளவர்களுக்கு இது பொருந்தாது எனக் கூறப்பட்டுள்ளது.