வேலைநேரத்திற்கு அப்பாற்பட்டு அதிகமாக உழைத்து இறந்தவருக்கு 4 லட்சம் டாலர் இழப்பீடு

  • 31 ஜனவரி 2017

வேலைநேரத்திற்கு அப்பாற்பட்டு அதிக நேரம் பணிபுரிந்ததால், இறந்துபோன ஒரு டோனட் (கிரீம் தடவிய ஒரு வகை பிரட்) கடையின் மேலாளரின் குடும்பத்திற்கு ஏற்பட்ட இழப்பீடுகளுக்காக 4 லட்சம் டாலர் வழங்க வேண்டும் என்று ஜப்பானிய நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்திருக்கிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

ஒரே நேரத்தில் இரண்டு 'மிஸ்டர் டோனட்' மையங்களை மேலாண்மை செய்து வந்ததால், ஒவ்வொரு மாதமும் 100 மணிநேரத்திற்கு மேலாக வேலை நேரத்திற்கு அப்பாற்பட்டு அவர் அதிக நேரம் கட்டாயமாக பணிபுரிய வேண்டியிருந்துள்ளது, அதுவே அவரது இறப்புக்கு காரணமாகியதை இந்த நீதிபதி கண்டறிந்துள்ளார்.

இந்த மனிதர் அதிக எடையுடையவர் என்றும், இவ்வளவு அதிக நேரம் வேலைநேரத்திற்கு அப்பாற்பட்டு பணிபுரிய அவரை கட்டாயப்படுத்தவில்லை என்றும் இந்த டோனட் நிறுவனம் வாதிட்டுள்ளது.

நீண்டநேரம் தீவிரமாக பணிபுரிவதால், ஜப்பானிலுள்ள ஐந்தில் ஒரு பகுதி தொழிலாளர்கள் இறந்துபோகும் ஆபத்தை எதிர்கொண்டு வருவதாக சமீபத்திய அரசு அறிக்கை ஒன்று கண்டறிந்துள்ளது.

எனவே, வேலைநேரத்தை குறைக்கவும், அதிக விடுமுறைகள் எடுக்கவும் தொழிலாளர்களை தூண்டுவதற்கு, அரசு ஊக்கமூட்டும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென அந்த அறிக்கை கேட்டு கொண்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர :பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்