ரஷ்யாவில் வீட்டு வன்முறைக்கான தண்டனை குறைக்கப்படுகிறது
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ரஷ்யாவில் வீட்டு வன்முறைக்கான தண்டனை குறைக்கப்படுகிறது

வீட்டு வன்செயல்களால் ரஷ்யாவில் மாதாந்தம் அறுநூறு பெண்கள் தமதுவீடுகளில் உயிரிழக்கிறார்கள்.

நிலைமை இப்படியிருக்கின்ற போதிலும், நாளை அந்த நாட்டின் மேலவை, தமது பெண் துணையை துஷ்பிரயோகம் செய்பவர் மீதான தண்டனையை குறைக்கும் வகையிலான சட்டம் ஒன்றை கொண்டுவருவது குறித்து கீழவையுடன் உடன்பாடு காணும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன் மூலம் வீட்டு வன்முறையால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு மருத்துவமனை சிகிச்சை தேவைப்படாத பட்சத்தில் அவரது கணவர் முதல் தடவையாக வீட்டு வன்முறையில் ஈடுபட்டிருந்தால் அவருக்கு சிறைத் தண்டனை வழங்கப்படாது.

இது வீட்டு வன்முறைகளை ஏற்கப் பழகும் ஒரு நிலைக்கான தவறான சமிக்ஞையாகிவிடும் என்று செயற்பாட்டாளர்கள் அஞ்சுகிறார்கள்.

இவை குறித்த பிபிசியின் காணொளி.