முகாபேயின் பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்கு பசுக் கொடை கேட்கிறது கட்சி

  • 1 பிப்ரவரி 2017
படத்தின் காப்புரிமை JEKESAI NJIKIZANA/AFP/Gettyimages
Image caption ’பிறந்த நாளுக்கு பசு வேண்டும்’

ஜிம்பாப்வேயின் ஆளும் கட்சியான, ஸானு-பி.எஃப், அதிபர் ராபர்ட் முகாபேயின் 93வது பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு விவசாயிகள் தங்கள் பசுக்களை நன்கொடையாக அளிக்க வேண்டும் என்று கோருகிறது.

அரசு நடத்தும் `ஹெரால்டு` பத்திரிகை, இந்த நன்கொடைகள் தாமாக முன்வந்து தரப்படுபவை என்றும், ஆனால் தெற்கு மட்டபெல்லாந்து பகுதியில் உள்ள பெரிய விவசாயிகள் கட்டாயமாக தலா ஒரு பசுவை தரவேண்டும் என்றும் கூறுகிறது.

அப்படி அவர்கள் தராவிட்டால், அதிபர் முகாபே அவர்களுக்கு செய்ததை அவர்கள் நன்றியுடன் பாராட்டவில்லை என்று அரசு அனுமானித்துக்கொள்ளும் என்று அது கூறுகிறது.

ஜிம்பாப்வேயின் சர்ச்சைக்குரிய நிலச் சீர்திருத்தத் திட்டங்களின்போது, வெள்ளைக்காரர்களின் பண்ணை நிலங்களை அரசு கையகப்படுத்திய பின்னர், உள்ளூர் விவசாயிகளுக்கு பெரிய அளவில் நிலங்கள் தரப்பட்டன.

நாட்டில் பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு மத்தியில், முகாபேயின் ஆடம்பரமான பிறந்தநாள் கொண்டாட்டங்களை எதிர்க்கட்சிப் பிரமுகர்கள் கடந்த காலங்களில் விமர்சித்திருக்கின்றனர்.