அமெரிக்க அதிபர் தேர்தலில் ஊடுருவல்: ரஷ்ய இணைய பாதுகாப்பு நிபுணர்கள் மீது தேச துரோக குற்றம்

  • 1 பிப்ரவரி 2017

அமெரிக்காவிடம் ரஷ்யாவை காட்டி கொடுத்ததற்காக ரஷிய இணைய பாதுகாப்பு நிபுணர்கள் மூவர் மீது தேச துரோக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது என ரஷிய ஊடகங்களின் செய்திகள் தெரிவிக்கின்றன.

படத்தின் காப்புரிமை Thinkstock

கைது செய்யப்பட்டவர்களில் எஃப் எஸ் பியின் தகவல் பாதுகாப்பு மையத்தின் துணைத் தலைவர் செர்கே மீகைலோவ் அவரின் சக ஊழியர் டிமிட்ரி டொக்குசைஎஃப் மற்றும் முன்னாள் இணையதள பாதுகாப்பு நிறுவனமான காஸ்பர்ஸ்கை லேப்பின் ஊழியர் ரஸ்லன் ஸ்டியானஃப் ஆகியோர் அடங்குவர் என கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரின் வழக்கறிஞர் இண்டர்பேக்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தார்.

எந்த தகவலின் அடிப்படையில் இந்த கைது தூண்டப்பட்டது என்பது தெளிவாக தெரியவில்லை.

ஆனால் அவர்கள் அமெரிக்க அதிபர் தேர்தலில், ரஷ்யா சட்டவிரோதமாக ஊடுருவியதில், சிஐஏ வெளியிட்ட உளவுத் தகவல்களுக்குக் காரணமாக இருந்திருக்கலாம் என சந்தேகங்கள் எழுந்துள்ளன.

தொடர்புடைய தலைப்புகள்