இது வரை நடத்திய தொலைபேசி உரையாடல்களிலேயே இதுதான் மோசமானது : டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் ஆகிய இருவருக்குமிடையே நடைபெற்ற ஒரு தொலைபேசி உரையாடல் அகதிகள் மறுவாழ்வு ஒப்பந்தம் ஒன்றை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

படத்தின் காப்புரிமை EPA
Image caption 'இது வரை நடத்திய தொலைப்பேசி உரையாடல்களிலேயே இதுதான் மோசமானது'

உலகத் தலைவர்களுடன் டிரம்ப் இது வரை நடத்திய தொலை பேசி உரையாடல்களிலேயே இது தான் மோசமான உரையாடல் என டிரம்ப் தெரிவித்ததாக வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலிய தடுப்பு முகாம்களில் இருந்து 1200 பேருக்கும் மேலானோரை அமெரிக்காவுக்கு அனுப்ப முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் நிர்வாகத்துடன் தாங்கள் கையெழுத்திட்ட ஒப்பந்தத்துக்கு டிரம்ப் மரியாதை தர வேண்டுமென உத்தரவாதம் அளிக்குமாறு ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் கேட்டுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

பெரும்பாலும் இரான், ஆப்கானிஸ்தான் மற்றும் இராக் போன்ற நாடுகளில் இருந்து வந்த அகதிகளை ஏற்றுக் கொள்ள சர்ச்சைக்குரிய முறையில் மறுத்து விட்ட ஆஸ்திரேலியா, அவர்களை அதற்கு பதிலாக பசிபிக் நாடுகளான நாரூ, பப்புவா நியூ கினியா தடுப்புக் காவல் மையங்களில் வைத்திருக்கிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்