“மீறப்பட்ட தீர்மானங்கள்” (உங்கள் புகைப்படத் தொகுப்பு)

ஏதாவது ஒரு தலைப்பில் வாசகர்களின் புகைப்படத் தொகுப்பை வெளியிடும் வழக்கத்தில், இந்த வார தலைப்பு: “மீறப்பட்ட தீர்மானங்கள்” .

கிரிஸ்பி கிரிஅந நியோன் விளக்கு

பட மூலாதாரம், Miles Ackerman

படக்குறிப்பு,

மைல்ஸ் அக்கர்மனுடைய இந்த புகைப்படத்தின் இந்த அறிகுறி டோனட்ஸ் (பிரட் உணவு வகை). சாப்பிடக்கூடாது என்ற தீர்மானம் முறிந்தது?

பட மூலாதாரம், Richard Forjoe

படக்குறிப்பு,

ரிச்சர்ட் ஃபோர்ஜோ: “முதல்முறை புகைபிடித்தல், புத்தாண்டு தினத்தில் மதிய வேளை. (இந்த ஆண்டு முதல் புகை பிடிக்கமாட்டேன் என்ற தீர்மானம் புகையாய்ப் போனது!)

பட மூலாதாரம், Alice Davies

படக்குறிப்பு,

ஆலிஸ் டாவிஸ்: “2016 டிசம்பர் 30 ஆம் தேதி எடுக்கப்பட்டது. கலோன் நகரிலுள்ள வணிக மையத்தின் மேலே ராட்சத ஐஸ் கிரீம் உருகுதல். இந்த ராட்சத உணவுகளை பார்த்து கவனம் திசைதிரும்பி, ஆரோக்கியமானதையே சாப்பிட வேண்டும் என்ற தீர்மானத்தை புத்தாண்டு தொடங்குவதற்கு முன்னரே மீறுவதற்கு நான் சோதிக்கப்படுகிறேன்”.

பட மூலாதாரம், Stuart Scott

படக்குறிப்பு,

ஸ்ராட் ஸ்காட்: “ஜின் மற்றும் டானிக்குகளை விட்டுவிடலாமா? வாய்ப்பேயில்லை” (நாளை முதல் குடிக்க மாட்டேன், சத்தியமடி தங்கம்!)

பட மூலாதாரம், Mike Finn

படக்குறிப்பு,

மைக் ஃபிண்: “இஸ்தான்புல் சந்தை- எப்படித் தவிர்ப்பது இந்த கேக்கை!”

பட மூலாதாரம், Martin Ryan

படக்குறிப்பு,

மார்ட்டின் ரயன்: “ஜனவரி மாதம் சற்று நீளமாகவே உள்ளது”

பட மூலாதாரம், Joel Cullum

படக்குறிப்பு,

இறுதியில், ருசியா, உடற்பயிற்சியா ? -ஜேயல் கல்லெமின் மிக கடினமானதொரு தீர்மானத்தின் புகைப்படம்.