பஞ்சாப், கோவா மாநிலங்களில் சட்டமன்ற வாக்குப்பதிவு

  • 4 பிப்ரவரி 2017

அதிக மதிப்புடைய இந்திய நாணயங்களான 500 மற்றும் 100 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்த சர்ச்சைக்குரிய நடவடிக்கைக்கு பிறகு, பிரதமர் நரேந்திர மோதிக்கு முதலாவது பெரிய சோதனையாக பார்க்கப்படும் முக்கிய மாநில சட்டமன்ற தேர்தல்களில் பல லட்சக்கணக்கான இந்தியர்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

அடுத்த ஐந்து வாரங்களில் ஐந்து மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவுக்குப் பின்னர் அங்கு புதிய அரசுகள் அமையவுள்ளன.

பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல் ; கரை சேரப்போவது யார் ?

இந்தியாவின் வட பகுதியில் இருக்கும் பஞ்சாப் மாநிலத்திலும், மேற்கு பகுதியிலுள்ள கோவாவிலும் இன்று சனிக்கிழமை வாக்கெடுப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. 7 கட்டங்களாக நடைபெறுகின்ற அதிக மக்கள்தொகையுடைய உத்தர பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெறுவது மோதிக்கு பெரும் சவாலாக இருக்கும்.

படத்தின் காப்புரிமை Getty Images

இமாலயப்பகுதி மாநிலமான உத்தராகண்டிலும், வட கிழக்கு மாநிலமான மணிப்பூரிலும் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.

மதம் மற்றும் சாதியை தேர்தல்களில் பயன்படுத்தக் கூடாது - இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

இந்த தேர்தல் மோதி பிரதமர் பதவியில் நீடித்திருப்பதை முடிவு செய்யாது என்றாலும், உத்தர பிரதேசம் போன்ற முக்கிய மாநிலத்தில் தோல்வியடைவது, அவரது அரசியல் எதிர்காலத்திற்கு பலத்த அடியாக பார்க்கப்படும் என்று அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

கூடுதல் தகவல்களுக்கு:

உத்தரப்பிரதேசம்: அகிலேஷ் யாதவ் ‘சைக்கிள்’ சின்னம் பெற்றார்

அகிலேஷ் - முலாயம் இடையே தொடர்ந்து சமரச முயற்சி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் கருத்து தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்