வியட்நாமில் சில விளையாட்டுப் போட்டிகள் மீதிருந்த சூதாட்ட தடை நீக்கம்

வியட்நாமில் சில விளையாட்டு போட்டிகள் மீது பந்தயம் வைத்து சூதாட விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க உள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

படக்குறிப்பு,

கோப்புப்படம்

இந்த விவகாரம் குறித்து சுமார் 20 வருடங்களாக அவர்கள் விவாதம் நடத்தி இந்த முடிவை எடுத்துள்ளனர்.

மார்ச் மாதத்தின் இறுதியிலிருந்து சர்வதேச கால்பந்து போட்டிகள், குதிரை மற்றும் வேட்டை நாய் போட்டிகளில் பொதுமக்கள் பந்தயம் கட்டி சூதாட முடியும்.

துவக்கத்தில், சூதாட்டக்காரர்கள் குறைந்தது 21 வயது உடையவராக இருக்க வேண்டும் என்றும், ஒரு நாளில் அதிகபட்சமாக 44 டாலர்கள் வரை மட்டுமே செலுத்தி சூதாட முடியும் என்றும் கட்டுப்பாடுகள் உள்ளன.

வியட்நாமில் சூதாட்டம் தடை செய்யப்பட்டிருந்தாலும் அது ஒரு வெற்றிகரமான கருப்பு சந்தையாக முழு வீச்சில் இயங்கி வருகிறது.

எனினும், கம்யூனிஸ்ட் நாடான வியட்நாமில் அங்குள்ள பல பாரம்பரியவாதிகள் சூதாட்டத்தை சமூகத்துக்கு கேடு விளைவிக்கும் ஒரு சக்தியாகவே பார்க்கிறார்கள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் கருத்து தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்