அமெரிக்காவிற்குள் நுழைய தடை: இடைநீக்கம் செய்த நீதிமன்றம், மேல்முறையீடு செய்துள்ள டிரம்ப் நிர்வாகம்

  • 5 பிப்ரவரி 2017

ஏழு முக்கிய முஸ்லிம் நாடுகளிலிருந்து வரும் மக்களை அமெரிக்காவிற்குள் நுழைய தடை செய்யும் அதிபர் டிரம்பின் முடிவை, மீண்டும் நடைமுறை படுத்த வேண்டும் என நீதிமன்றத்தில் அமெரிக்க அரசாங்கத்தால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை AFP

தடையை இடை நீக்கம் செய்த நீதிபதிக்கு, டிரம்ப் தனது அடுத்தடுத்த டீவிட்டுக்களில் கண்டனம் தெரிவித்துள்ளார்; மேலும் தடையை இடை நீக்கம் செய்வதால், தீய மற்றும் ஆபத்தானவர்கள் அமெரிக்காவிற்குள் வரக் கூடும் என்றும் எச்சரித்துள்ளார்.

இருப்பினும் முக்கிய விமான சேவை நிறுவனங்கள், தங்களின் விமானங்களில் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்கு செல்ல மக்களை அனுமதிக்கின்றன.

மேலும் அந்த போக்குவரத்து தடையை எதிர்த்து வாஷிங்கடன், மியாமி மற்றும் பிற அமெரிக்க நகரங்களிலும், பல ஐரோப்பிய தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

தொடர்புடைய தலைப்புகள்