சர்வதேச தடைகளின்போது, வட கொரியாவை தூக்கி நிறுத்திய நிழலுலகச் சந்தை

  • 5 பிப்ரவரி 2017

2016 ஆண்டு வட கொரியா மீது விதிக்கப்பட்டிருந்த சர்வதேச தடைகளை அந்நாடு சமாளிப்பதற்கு, அங்கு வளர்ந்து வருகின்ற நிழலுலகச் சந்தை உதவியிருப்பதாக அந்த நாட்டின் பொருளாதாரம் மீதான அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

சட்டப்பூர்வமற்றதாக இருந்தாலும் பரவலாக பொறுத்துகொள்ளக்கூடியதாக மாறியிருக்கும் அதிகாரபூர்வமற்ற சந்தையை கட்டுப்படுத்துவதற்கு, வட கொரியாவின் சர்வாதிகார தலைமைத்துவம் எவ்வித அறிகுறியையும் காட்டவில்லை என்று தென் கொரிய அரசுக்கு ஆலோசனை கூறுகின்ற வல்லுநர்களால் நடத்தப்பட்ட இந்த ஆய்வு கண்டறிந்திருக்கிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

இதுவரை இல்லாத அளவுக்கு அதிக சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிற அணு சோதனையை 2016 ஆம் ஆண்டு செப்டம்பரில் நடத்தியதை தொடர்ந்து வட கொரியா மீதான ஐக்கிய நாடுகள் அவையின் தடைகள் இறுக்கமாயின.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் கருத்து தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்