ரூமேனியா: ஊழல் தண்டனையை குறைக்கும் ஆணை ரத்து

ஊழலுக்கு வழங்கப்படுகின்ற தண்டனைகளைக் குறைக்க இருந்த ஆணையொன்று ரூமேனியாவில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆனால் அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வழங்கப்படவில்லை.

படத்தின் காப்புரிமை Getty Images

பிரதமர் கோரீன் கிரென்டியாநோவால் நடத்தப்படவிருந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

இன்று, ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத்தில் இந்த ஆணை முறைப்படி ரத்து செய்யப்படும் என்று பிரதமர் வாக்குறுதி அளித்திருந்தார்.

இந்த ஆணை ரத்து செய்யப்படுவது உறுதியாவது வரை, தாங்கள் இருக்கின்ற இடத்தை விட்டு அகல போவதில்லை என்று 6-வது நாளாக தொடர்ந்து போராட்டக்காரர்கள் அரசு கட்டடத்திற்கு வெளியே கூடியிருந்தனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

திருத்தியமைக்கப்பட்ட ஒரு சட்ட வரைவை நாடாளுமன்றத்தில் முன்வைக்க அரசு எண்ணியிருப்பதாகவும் போராட்டக்காரர்கள் கவலையடைந்துள்ளனர்.

தங்களுடைய முன்மொழிவுகளால் சிறை நிரம்பி வழிவது குறையும் என்பது அமைச்சர்களின் வாதமாக இருக்க, இந்த நடவடிக்கைகள் ஊழலுக்கு ஊக்கமளிக்கும் என்றும், குற்றவாளிகளின் நடவடிக்கைகளில் இருந்து அவர்களை பாதுகாக்கும் என்றும் போராட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் கருத்து தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்