'பயணத்தடை அமெரிக்க நலன்களை பாதித்து குழப்பங்களை உருவாக்கும்'

பயணத்தடையை மீண்டும் அமலாக்குவது குழப்பங்களை கட்டவிழ்த்துவிடலாம் என்று மத்திய மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் இரு அமெரிக்க மாநிலங்கள் தெரிவித்திருக்கின்றன.

படத்தின் காப்புரிமை AFP

டிரம்ப் விதித்த பயணத்தடைக்கு எதிராக தேசிய அளவில் வழங்கப்பட்டிருந்த தற்காலிக இடைநிறுத்தத்தை நீக்கிவிட்டு, டிரம்பின் நிர்வாக ஆணையை உடனடியாக அமலாக்க தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டுக்கு எதிராக வாஷிங்டன் மற்றும் மின்னெசோட்டா மாகாண வழக்கறிஞர்கள் பதிலளித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Astrid Riecken/EPA

அமெரிக்காவின் நலன்களுக்கு டிரம்ப் விதித்த தடை நீண்டகால சேதங்களை உருவாக்கலாம் என்ற முன்னாள் மூத்த உளவுத்துறை, வெளியறவு கொள்கை மற்றும் தேசிய பாதுகாப்பு அதிகாரிகளின் எச்சரிக்கையை உள்ளடக்கியதாக இந்த அறிக்கையின் ஒரு பகுதி இருந்தது.

அமெரிக்க நீதித்துறை திங்கட்கிழமை மாலையில் இதற்கு பதிலளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் கருத்து தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்