ஆப்கானில் பணியை இடைநிறுத்தியது செஞ்சிலுவைச் சங்கம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஆப்கானில் பணியை இடைநிறுத்தியது செஞ்சிலுவைச் சங்கம்

ஆப்கானிஸ்தானுக்கான தமது உதவி நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்துவதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கூறியுள்ளது.

அந்த அமைப்பின் வாகனத்தொடரணி மீதான தாக்குதலில் அதன் பணியாளர்கள் ஆறு பேர் கொல்லப்பட்டதை அடுத்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.

இரு பணியாளர்களை காணவில்லை.

இஸ்லாமிய அரசு என்று தம்மைக் கூறிக்கொள்ளும் குழுவே இத்தாக்குதலுக்கு காரணம் என்று ஆப்கானிய அதிகாரிகள் நம்புகின்றனர்.