கென்யாவில் கடும் வறட்சி : சர்வதேச உதவிகளை கோரும் அதிபர்

  • 10 பிப்ரவரி 2017

கென்யாவில் தற்போது பெரும்பாலான பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருவதால் இதனை ஒரு தேசிய பேரழிவாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

தன் சொந்த முயற்சிகளை அரசாங்கம் முடுக்கிவிட்டுள்ள நிலையில் அதற்கு உள்ளூர் மற்றும் சர்வதேச உதவிகள் தேவை என கென்யா நாட்டின் அதிபர் யுஹுரு கென்யட்டா கோரிக்கை விடுத்துள்ளார்.

கென்யா நாட்டில் உள்ள 47 மாவட்டங்களில் சுமார் பாதிக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வறட்சி நிலவி வருகிறது.

உணவு மற்றும் பிற பொருட்கள் உள்பட அரசாங்கம் வாங்கும் அனைத்து பொருட்களும் வெளிப்படையான வழியில் பெறப்படும் என்று அதிபர் வலியுறுத்தியுள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்