ஆண் வேடத்தில் கால்பந்து போட்டியைக் காணவந்த இரானியப் பெண்கள் தடுப்பு

  • 14 பிப்ரவரி 2017

இரானில் கால்பந்து போட்டிகளை பெண்கள் காண்பதற்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையை எதிர்த்து ஆண் வேடம் அணிந்து மைதானத்திற்குள் நுழைந்த பல இளம் பெண்களை தடுத்து நிறுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption இரானில் கால்பந்து போட்டி ஒன்றை காணவந்திருந்த ஆண் ரசிகர்கள்

ஞாயிறன்று டெஹ்ரானில், இரானின் மிகப் பிரபலமான இரண்டு அணிகள் விளையாடும் கால்பந்து போட்டியை காண முயன்ற எட்டு பெண்களை பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

இரானில் 1979 ஆம் ஆண்டு இஸ்லாமிய புரட்சி நடைபெற்றதிலிருந்து கால்பந்து போட்டிகளையும் பிற விளையாட்டு நிகழ்ச்சிகளையும் பெண்கள் காண தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்