ஹெச்ஐவி பரவல் தடுப்புக்கு மத தலைவர்களின் முக்கிய பங்கு

ஹெச்ஐவி பரவுவதை தடுப்பதில் மத தலைவர்கள் முக்கிய பங்காற்றலாம் என்று தான்சானியாவில் நடத்தப்பட்ட அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

படத்தின் காப்புரிமை Getty Images

மத குருக்கள் சுன்னத்து செய்துகொள்வது பற்றி அவர்களின் சமூகங்களிடம் கலந்துரையாடினால், ஒரு மில்லியனுக்கு மேலானோர் சுன்னத்து செய்துகொள்ள சம்மதிக்கலாம் என்று அமெரிக்காவின் கோர்நெல் மற்றும் தான்சானியாவின் மவான்ஸா பல்கலைக்கழகங்களின் விஞ்ஞானிகளால் நடத்தப்பட்டுள்ள இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

சுன்னத்து செய்துகொள்வது இயல்பான, வேற்றுப்பாலின உணர்வுடைய ஆண்களிடம் ஹெச்ஐவி பரவுவதை சுமார் 60 சதவீதம் குறைக்கிறது என்று உலக சுகாதார நிறுவனம் குறிப்பிடுகிறது.

இந்த ஆய்வின் முடிவுகள் "த லென்செட்" என்ற மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்