இணையத்தை கலக்கும் 'குட்டி டிரம்ப்' மீம்கள்

Doctored image showing Trump as so tiny his feet dangle from his chair, listening to a regular-sized Barack Obama படத்தின் காப்புரிமை Alamy
Image caption பெரும்பாலான இந்த திருத்தப்பட்ட புகைப்படங்கள் சமீபத்திய செய்திகளை தொடர்ந்து படித்து வருபவர்களுக்கு மிகவும் பரிச்சயமானதாக இருக்கும்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் கைகளின் அளவு குறித்து எழுந்த கருத்துகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதில் சொல்லியதை அவருடைய எதிர்ப்பாளர்கள் அறிந்திருப்பார்கள்.

தற்போது, சில இணையதள பயன்பாட்டாளர்கள் ஒருபடி மேலே சென்று டொனால்ட் டிரம்பின் புகைப்படங்களில் திருத்தங்களை செய்து அவரது உடல் சிறியதாக தோன்றும்படி செய்துள்ளனர்.

அவரை மிகவும் குட்டியாக காட்ட வேண்டும் என்பதால் டிரம்பின் பெரும்பாலான படங்கள் திருத்தப்பட்டுள்ளன.

தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக பரவி வருகின்றன.

இந்த புகைப்படங்கள் குறித்து அமெரிக்க அதிபர் இன்னும் தன் கருத்துக்களை தெரிவிக்கவில்லை

படத்தின் காப்புரிமை @ClintFalin
படத்தின் காப்புரிமை enzait
Image caption டிரம்ப் தன்னுடைய மகள் டிஃப்பனியுடன் அமர்ந்திருக்கும் இந்த புகைப்படத்தை யாரோ திருத்தியுள்ளார். அதில், ஒரு குழந்தையின் ஓவியத்தை டிரம்ப் பெருமையோடு பிடித்திருக்கும்படி தோன்றுவது போல மாற்றப்பட்டுள்ளது.
படத்தின் காப்புரிமை Myg0t_0
Image caption கடந்த வாரம் வெள்ளை மாளிகைக்கு வந்திருந்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் புகைப்படத்தையும் குறும்புக்காரர்கள் திருத்தியுள்ளனர்.
படத்தின் காப்புரிமை @b.i.g_paige
Image caption அதிபர் தேர்தலில் டிரம்புக்கு எதிராக போட்டியிட்ட ஹிலரி கிளிண்டன் கையில் இருக்கும் குழந்தையின் தலையை திருத்தி டிரம்பின் தலை இணைக்கப்பட்டதன் மூலம் இன்ஸ்டாகிராம் பயன்பாட்டாளர்களும் இந்த விஷயத்தில் நுழைந்துள்ளனர்.
படத்தின் காப்புரிமை @p4k9
Image caption குறைந்த தொழில்நுட்பம் வழி ஒன்றின் மூலம் இந்த மீம்மை மீள் உருவாக்கம் செய்துள்ளார் இந்த இஸ்டாகிராம் பயன்பாட்டாளர்.
படத்தின் காப்புரிமை smelly_jim
Image caption என்னால் செய்ய முடிந்திருந்தால், டிரம்ப் இந்தப் படத்தில் என் கவனத்தின் மையமாக இருந்திருக்கமாட்டார் என்பதால் இந்த புகைப்படத்திலிருந்து டிரம்பின் தலையை முழுவதுமாக வெட்டியுள்ளதாக இந்த பயன்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.
படத்தின் காப்புரிமை coyote_lost
Image caption டைம் நாளிதழின் தற்போதைய பிரதியில் வெளியான முதல் பக்கத்திலிருந்த டிரம்ப் புகைப்படத்தை அவர் அமர்ந்திருக்கும் நாற்காலியை காட்டிலும் மிகவும் சிறியதாக மாற்றியுள்ளார் இந்த பயன்பாட்டாளர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்