கம்போடியா, அரசியல், கடினமான ஆண்டு பற்றி ஆஞ்ஜெலினா ஷோலி

  • 20 பிப்ரவரி 2017

கம்போடியா எப்படி தன்னை `விழிப்புணர்வு` பெற வைத்தது என்று , ``பஸ்ட் தே கில்ட் மை ஃபாதர்" என்ற தன்னுடைய புதிய திரைப்படம் கம்போடியாவில் வெளியாவதை முன்னிட்டு பிரபல ஹாலிவுட் திரை நட்சத்திரம் ஆஞ்ஜெலினா ஷோலி பிபிசியிடம் கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை KHALIL MAZRAAWI/AFP/Getty Images

ஒரு குழந்தையின் பார்வையின் ஊடாக `கேமர் ரூஜ்` என்றறியப்பட்ட கம்போடிய கம்யூனிஸ்ட் கட்சியினர் நடத்திய இனப்படுகொலையை பற்றிய சம்பவங்களை ஒரு உண்மை சம்பவம் மூலம் விவரிக்கின்ற "பஸ்ட் தே கில்ட் மை ஃபாதர்" திரைப்படத்தை திரையிடுவதற்கு முன்னால் பிரபல நட்சத்திர நடிகை ஆஞ்ஜெலினா ஷோலி பிபிசிக்கு பிரத்தியேக பேட்டி அளித்தார்.

அவர் இயக்கியிருக்கும் இந்த திரைப்படம், கேமர் ரூஜ் இனப்படுகொலைபோது அனுபவித்த பேரதிர்ச்சியை கம்போடிய மக்கள் வெளிப்படையாக பேச உதவுமென நம்புவதாக ஆஞ்ஜெலினா ஷோலி கூறியிருக்கிறார்.

ஆஞ்ஜெலினா ஷோலி: மார்பகற்று மருத்துவம் சரியா?

கேமர் ரூஜ் இனப்படுகொலையின்போது 20 லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இப்போது ஐக்கிய நாடுகள் அவையின் அகதிகள் நிறுவனத்தின் சிறப்புத் தூதராக விளங்கும் ஆஞ்ஜெலினா ஷோலி, 2001 ஆம் ஆண்டு பெரும் வெற்றிபெற்ற "லாரா குரோஃப்ட்: டும்ப் ரெய்டர்" திரைப்படத்தின் காட்சிப்பதிவின்போது முதல்முறையாக கம்போடியாவில் பயணம் மேற்கொண்டார்.

மார்பகப் புற்றுநோய்க்கு பலியானார் ஆஞ்ஜெலினாவின் சித்தி

கம்போடியாவில் இருந்துதான் பின்னர் தன்னுடைய மூத்த மகன் மேடோக்ஸைத் தத்து எடுத்து கொண்டார்.

"இந்த நாட்டுக்கு வந்த நான், இங்குள்ள மக்களை நேசிக்க தொடங்கினேன். இந்த நாட்டின் வரலாற்றை கற்றுக்கொண்டேன். அவ்வாறு கற்றபோது, உண்மையிலேயே உலகத்தை பற்றி எவ்வளவு குறைவாக எனக்கு தெரிந்திருக்கிறது என்பதை அறிய வந்தேன்" என்று பிபிசியின் யல்டா ஹாகிமிடம் அவர் கூறினார்.

Image caption கம்போடியாவுக்கு மேற்கொண்ட அவரது முதல் பயணம் "விழிப்புணர்வு" அளிக்கின்ற ஒன்றாக இருந்தது என்று தெரிவித்த ஆஞ்ஜெலினா ஷோலி, பின்னர் அங்கிருந்துதான் தன்னுடைய மகன் மேடோக்ஸை தத்து எடுத்தார்.

"இந்த நாடு எனக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

இந்த நாட்டிற்கு நான் எப்போதும் நன்றியோடு இருப்பேன். இந்த நாடு எனக்கு வழங்கி இருக்கும் அளவுக்கு, என்னால் அதற்கு பிரதிபலன்கள் வழங்க முடியும் என்று நான் எண்ணவில்லை" என்கிறார் ஆஞ்ஜெலினா ஷோலி.

"சரியான புரிதல் இல்லை"

ஆஞ்ஜெலினா ஷோலி இயக்கியிருக்கும் "பஸ்ட் தே கில்ட் மை ஃபாதர்" என்ற திரைப்படம் இதே பெயரில் லோவுங் உங் என்ற எழுத்தாளரால் எழுதப்பட்டுள்ள புத்தகத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

பிராட் பிட்டை விவாகரத்து செய்யவுள்ளார் நடிகை ஆஞ்சலீனா ஜோலி

சர்வாதிகாரி போல் பாட்டின் கீழ் கம்போடியாவை 1975 முதல் 1979 வரை கேமர் ரூஜ் ஆட்சி செய்த காலத்தில், தலைநகரான பினோம் பென்னில் இருந்த தங்களுடைய இல்லத்தில் இருந்து வெளியேற லோவுங் உங்கும், அவரது குடும்பத்தினரும் கட்டாயப்படுத்தப்பட்டபோது, லோவுங் உங்குக்கு வயது 5தான்.

கம்போடியாவின் மொத்த மக்கள்தொகையில் ஏறக்குறைய கால்பகுதி என்று கருதப்படும் சுமார் 20 லட்சம் பேர் கேமர் ரூஜ் ஆட்சிக்காலத்தில் கொல்லப்பட்டனர் அல்லது பட்டினி மற்றும் அதிக பணிச்சுமையால் இறந்தனர் என்று மதிப்பிடப்படுகிறது.

"40 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற இந்த போரும், இந்த நாட்டு மக்களுக்கு என்ன நடந்து என்பதும் சரியாக புரிந்துகொள்ளப்படவில்லை என்று நான் எண்ணினேன்" என ஆஞ்ஜெலினா ஷோலி குறிப்பிடுகிறார்.

ஆஞ்ஜெலினா ஷோலி -பிராட்பிட் திருமணம்

உள்ளூர் கேமர் மொழியில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. கம்போடியாவிலுள்ள நிகழ்வுகளை உலக நாடுகள் விரிவாக புரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்பியதாக கூறியிருக்கும் ஆஞ்ஜெலினா ஷோலி, உள்நாட்டிலும் இது தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்புவதாக தெரிவித்திருக்கிறார்.

உயிர் தப்பிய பலரும், "இந்த ஆட்சிக்காலக் கதைகளை தங்களுடைய குழந்தைகளுக்கு இதுவரை சொல்லாமல் இருக்கின்ற நிலையில், இந்த திரைப்படம் நாட்டு மக்கள் இந்த படுகொலை பற்றி அதிகமாக விவாதிக்க உதவும் என நம்புகிறேன்" என்கிறார் ஆஞ்ஜெலினா ஷோலி.

"கடினமான நேரம்"

`டூம்ப் ரெய்டர்` திரைப்படத்தின் ஒரு பகுதி காட்சிப்பதிவு செய்யப்பட்ட சியம் ரீப் என்ற இடத்திலுள்ள அங்கோர் வாட் கோயில் வளாகத்திற்குள் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் தயாரித்த "பஸ்ட் தே கில்ட் மை ஃபாதர்" திரைப்படத்தின் உலக வெளியீடு சனிக்கிழமையன்று நடத்தப்பட்டது.

மகனை தாக்கியதாக பிராட் பிட் மீதான குற்றச்சாட்டு குறித்த விசாரணை முடித்து வைப்பு

ஆஞ்ஜெலினா ஷோலி மற்றும் அவருடைய 6 குழந்தைகளின் பக்கத்தில், 2005 ஆம் ஆண்டு நடிகை ஆஞ்ஜெலினா ஷோலி கம்போடிய குடியுரிமை வழங்கிய அந்நாட்டின் அரசர் நோரோடாம் சைஹாமேனி அமர்ந்திருந்தார்.

கம்போடியாவில் இந்த நடிகை நிறுவியிருக்கும் சுற்றுச்சூழல் அறக்கட்டளையின் மூலம் நிறைவேற்றிய பணிகளுக்காக கம்போடிய குடியுரிமை ஆஞ்ஜெலினா ஷோலிக்கு வழங்கப்பட்டது.

படத்தின் காப்புரிமை EPA
Image caption 6 குழந்தைகளோடுஆஞ்ஜெலினா ஷோலி இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்

கருத்து வேறுபாடுகளை காரணம் காட்டி, கடந்த ஆண்டு திரை நட்சத்திரம் பிராட் பிட்டிடம் இருந்து விவாகரத்து பெறுவதற்கு வழக்கு தொடுத்த பின்னர், மக்கள் மத்தியில் ஆஞ்ஜெலினா ஷோலி தோன்றுகிற முதல் பெரிய நிகழ்வாக இந்த திரைப்பட வெளியீடு அமைந்தது.

2004 ஆம் ஆண்டு முதல் இணைந்து வாழ்ந்த இந்த ஜோடி, 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்தான் திருமணம் செய்தது.

பிராட் பிட் மீது எஃப்.பி.ஐ விசாரணை?

"இது மிகவும் கடினமாக இருந்தது, இத்தகைய சூழ்நிலையில் பலர் உள்ளனர். எனது குடும்பம் முழுவதும் கடினமானதொரு காலத்தை கடந்துள்ளோம். என்னுடைய கவனம் எல்லாம் என்னுடைய குழந்தைகள், நம்முடைய குழந்தைகள்" என்று ஆஞ்ஜெலினா ஷோலி குறிப்பிட்டுள்ளார்.

"நாம் அனைவரும் ஒரு குடும்பமாக இருக்கிறோம். எப்போதும் அப்படியே இருப்போம். இதைத்தான் நான் திரைப்படத்தில் பதிவு செய்கிறேன். நம்மை எப்படியாவது வலுவாகவும், நெருக்கமாகவும் ஆக்குவதை உறுதி செய்வதற்கு வழியை கண்டறிவதோடு திரைப்படத்தை எடுத்து வருகிறேன்".

டிரம்ப் பற்றி கருத்து

பயத்தால் அல்லாமல் உண்மையில் அடிப்படையில் அவரது தாய்நாடான, அமெரிக்கா, தீர்மானங்களை எடுக்க வேண்டுமென கோரி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த குடிவரவுக்கு தடை பற்றி நியூ யார்க் டைம்ஸில் ஆஞ்ஜெலினா ஷோலி சமீபத்தில் எழுதியிருந்தார்.

டிரம்பை குறிப்பிட்டு எழுத தயங்கியுள்ள அவர், "எந்த அதிபரையும் விட அமெரிக்க மக்கள்தான் பெரியவர்கள். என்னுடைய நாடு நிறுவப்பட்டுள்ள மற்றும் நாங்கள் மிகவும் மதித்து கடைபிடிக்கும் மதிப்பீடுகள் மீது எனக்கு நம்பிக்கையுள்ளது" என்று தெரிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption கம்போடிய அரசியின் தாய் மோனீக்குடன் ஜூலியானா. கம்போடிய படுகொலை பற்றி இந்நாட்டு மக்கள் வெளிப்படையாக பேச இந்த திரைப்படம் உதவும் என்று நம்புவதாக ஆஞ்ஜெலினா ஷோலி தெரிவித்திருக்கிறார்.

"நாம் கேள்விப்படும் பல விடயங்கள் பீதியை அல்லது வெறுப்பை பரப்புகின்ற அல்லது இனம் மற்றும் முன்சார்பு எண்ணத்தால் தீர்ப்பிடுவதன் மூலம் மக்களை பிளவு படுத்துகின்றவற்றை அடிப்படையாக கொண்டவை என நாம் உணர்பவை அமெரிக்க கொள்கைகள் அல்ல``.

இந்த தருணத்தில், உலக நாடுகளிலுள்ள மக்கள் அனைவரும் சிவில் சுதந்திரத்தை, உரிமைகளை, தங்களின் கருத்துக்களை பற்றி பேச துவங்கியிருப்பது ஆச்சரியமூட்டுகிறது. எனக்கு இது அமெரிக்க கொள்கை அல்ல, இது அரசியல் சாசனத்திற்கு புறம்பானது என்று அமெரிக்காவில் கருத்துகள் வெளியிடப்படுவதை கேட்கிறோம். இதையே நானும் கருத்தாக கொண்டுள்ளேன்" என்று ஆஞ்ஜெலினா ஷோலி இந்த கட்டுரையில் எழுதியுள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்