வடகொரிய-மலேஷிய ராஜாங்க மோதல் முற்றுகிறது

வடகொரிய-மலேஷிய ராஜாங்க மோதல் முற்றுகிறது

வடகொரியத்தலைவர் கிம் ஜான் உங்கின் தந்தையின் மறுதாரத்து மகனின் கொலையைத்தொடர்ந்து மலேஷியாவுக்கும் வடகொரியாவுக்கும் இடையில் அதிகரிக்கும் ராஜாங்க மோதலின் ஒரு பகுதியாக, வடகொரியாவுக்கான மலேஷியத்தூதரை மலேஷிய அரசு திரும்ப அழைத்துள்ளது.

கோலாலம்பூரில் இருக்கும் வடகொரிய தூதரையும் மலேஷிய அரசு நேரில் அழைத்து விளக்கம் கோரியுள்ளது.

வடகொரியாவின் எதிரிகளோடு மலேஷியா இணைந்து செயற்படுவதாக அவர் சென்றவாரம் குற்றம்சாட்டியிருந்தார்.

வடகொரியத் தலைவரின் ஒன்றுவிட்ட சகோதரர் மலேஷிய சர்வதேச விமான நிலையத்தில் விஷம் கொடுத்து கொல்லப்பட்ட புகாரை மலேஷிய அரசு புலனாய்வு செய்துவருகிறது.