மெல்ஃபோர்ன் விமான விபத்தில் 5 பேர் பலி

மெல்ஃபோர்னின் வணிக மையம் ஒன்றில் மென்ரக விமானம் ஒன்று மோதிய விபத்தில் 5 பேர் பலியாகியுள்ளதாக ஆஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விமான விபத்து ஏற்பட்ட இடம்

பட மூலாதாரம், 9news.com.au

இந்த விமானத்தில் பயணம் செய்தோரை தவிர வேறு யாரும் உயிரிழக்கவில்லை என்று விக்டோரியா காவல்துறை உதவி ஆணையாளர் ஸ்டீபன் லியானி தெரிவித்திருக்கிறார்.

மெல்ஃபோர்னின் சிறிய எஸ்சென்டன் விமானநிலையத்தில் இருந்து மேலெழுந்து பறந்தபோது, "மிக மோசமான இயந்திர கோளாறு" ஏற்பட்டதாக தோன்றுவதாக அவர் தெரிவித்தார்.

அந்த வணிக மையம் அப்போது திறந்திருக்கவில்லை.

டாஸ்மேனியாவின் பாஸ் நீரிணையின் அருகிலுள்ள கிங் தீவுக்கு விமானத்தில் பயணித்துக்கொண்டிருந்த 5 பேரும் சென்றதாக விக்டோரியா காவல்துறை அமைச்சர் லிசா நேவில்லி தெரிவித்தார்.

நடத்திருப்பது மிகவும் சோகமாக விபத்து என்று அவர் ஆஸ்திரேலிய ஒளிபரப்பு நிறுவனத்திடம் கூறியிருக்கிறார்.

பெரும்பாலும் மென்ரக விமானங்கள் மட்டுமே பயன்படுத்தும் எஸ்சென்டன் விமான நிலையம், மத்திய மெல்ஃபோர்னின் வட மேற்காக சுமார் 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்