ஃபிளினுக்கு பதிலாக புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகரை நியமித்தார் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் லெப்டினன்ட் ஜெனரல் ஹெர்பர்ட் ரெய்மன்ட் மெம்மாஸ்டரை தன்னுடைய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமித்துள்ளார்.

ஹெர்பர்ட் ரெய்மன்ட் மெம்மாஸ்டர்

பட மூலாதாரம், AP

மூன்று வாரங்கள் மூன்று நாட்கள் மட்டுமே இந்த பொறுப்பில் இருந்து பதவி விலகிய லெப்டினன்ட் ஜெனரல் மைக்கேல் ஃபிளினுக்கு பதிலாக மெம்மாஸ்டர் இந்த பதவியை ஏற்கிறார்.

அமெரிக்க படையின் லெப்டினன்ட் ஜெனரல்களில் ஒருவரான ஹெர்பர்ட் ரெய்மன்ட் மெம்மாஸ்டர், இராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் அரசின் ஊழல் தடுப்பு நடவடிக்கையில் பணிபுரிந்துள்ளார்.

தேசிய பாதுகாப்பு ஆலோசகராக, அதிபர் டிரம்ப் தனது முதல் தேர்வாக நியமிக்க விரும்பிய ஓய்வு பெற்ற துணை அட்மிரல், ராபர்ட் ஹார்வர்ட், "தனிப்பட்ட காரணங்களை'' சுட்டிக்காட்டி, அப்பதவியை ஏற்க மறுத்தார்.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு,

லெப்டினன்ட் ஜெனரல் மைக்கேல் ஃபிளின் மூன்று வாரங்கள் மூன்று நாட்கள் மட்டுமே தேசிய ஆலோசகர் பதவியில் இருந்தார்

ஹெர்பர்ட் ரெய்மன்ட் மெம்மாஸ்டரை, சிறந்த திறமையான மனிதர்; அதிக அனுபவம் வாய்ந்தவர்; ராணுவத்தில் அனைவராலும் உயர்வாக மதிப்பளிக்கப்படுபவர் என்று டிரம்ப் புகழ்ந்துள்ளார்.

ஜெனரல் மெம்மாஸ்டர் ஆப்கானிஸ்தான் மற்றும் இராக்கில் பணிபுரிந்துள்ளதாகவும், சிந்தித்து செயல்படுபவர், நேரடியாக பேசுபவர், ராணுவ வியூகங்களை வகுப்பதில் வல்லவர் என்று தெரிய வருவதாகவும் வாஷிங்டனில் இருக்கிற பிபிசி செய்தியாளர் அலீம் மாக்பூல் தெரிவித்துள்ளார்.

மெம்மாஸ்டர் ரஷ்யாவோடு நெருங்கிய உறவில் இருப்பவராக தோன்றவில்லை என்றும், ரஷ்யா செய்த ராணுவ நகர்வுகள் சிலவற்றை எதிர்கொள்வதற்கான வழிகளை ஆராய சமீபத்தில் பணிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்