"ஊழல் ஒழியாத வரை ஐ.எஸை தோற்கடிக்க முடியாது" - டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்

இஸ்லாமிய அரசு குழு (ஐ..எஸ். குழு) வலுவாக வளர காரணமாக இருக்கின்ற ஊழல் நிலைமைகளை எதிர்கொண்டு சமாளிக்காத வரை, இந்த ஐ..எஸ். குழுவை தோற்கடிக்க முடியாது என்று ஊழலுக்கு எதிராக பரப்புரை மேற்கொள்ளும் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இராக் படைப்பிரிவு

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு,

ஐ.எஸ். பிடியிலுள்ள மொசூல் நகரின் தெற்கு பகுதியில் முன்னேறி செல்லும் இராக் படைப்பிரிவு

தீவிரவாத வன்முறைகைள் தோன்றுவதற்கு அடிப்படை காரணங்களை எதிர்கொண்டு சமாளிப்பதில், மேற்குலக வல்லரசுகள் தோல்வியடைந்துள்ளன என்று இந்த அமைப்பு தெரிவிக்கிறது,

வரி செலுத்துவோரின் பணமானது, சுரண்டலை உருவாக்கவோ, நாட்டின் அரசமைப்பில் உள்ள சக்திகள் மக்களை அழிக்கவோ உதவுகின்ற வகையில் பயன்படுத்தப்பட கூடாது என்று இது கூறியுள்ளது.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு,

மேற்குலக நாடுகள் உயர்மட்ட ஊழலை களைய முயல வேண்டும் என இந்த அறிக்கை தெரிவிக்கிறது

இராக், லிபியா மற்றும் நைஜீரியா நாடுகளுக்கு மேற்குலக நாடுகள் வழங்குகின்ற ராணுவ உதவியை குறிப்பிட்டு டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு இதனை தெரிவித்திருக்கிறது,

காணொளி: ஆப்கானில் பணியை இடைநிறுத்தியது செஞ்சிலுவைச் சங்கம்

காணொளிக் குறிப்பு,

ஆப்கானில் பணியை இடைநிறுத்தியது செஞ்சிலுவைச் சங்கம்

மேலதிக தகவல்களுக்கு:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்