ஜப்பானில் மரபணு மாறியதால் கொல்லப்பட்ட 57 குரங்குகள்

ஜப்பானின் வடக்கு பகுதியில், பாரம்பரிய பனி குரங்குகளுக்கு பெயர் போன உயிரியல் பூங்கா ஒன்றில், அதன் பராமரிப்பில் இருந்த 57 குரங்குகளின் உடலில் வேறொரு இனத்தின் மரபணு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் அவை கொல்லப்பட்டுள்ளன.

பாரம்பரிய பனி குரங்குகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

பாரம்பரிய பனி குரங்குகள்

சீபா நிர்வாக மாவட்டத்தில் உள்ள டாக்காகோயாமா இயற்கை உயிரியல் பூங்காவில், மூன்றில் ஒரு குரங்கு ஜப்பானில் ஆபத்தானதாகக் கருதப்படும் அன்னிய குரங்கு இனமான ரீசெஸ் மாகாக் இன குரங்குகளுடன் கலப்பினம் செய்யப்பட்டுள்ளது என அவற்றின் டி.என்.ஏவை பரிசோதித்த போது தெரியவந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

உள்நாட்டு சூழலை பாதுகாக்க அவைகளை கொல்ல வேண்டிய அவசியம் வந்ததாக உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த குரங்குகள் விஷ ஊசி போட்டு கொல்லப்பட்டன. மேலும் உயிரியல் பூங்காவின் ஊழியர்கள் அருகாமையில் உள்ள புத்த கோயிலில் குரங்குகளின் ஆத்மா சாந்தியடைய வழிபாடு நடத்தினர்.

மூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்