பிரிட்டனிற்கு தங்கள் துணையை அழைத்துவர குறைந்த பட்ச ஊதிய நிர்ணயத்தை உறுதி செய்த நீதிமன்றம்

பிரிட்டனின் குடிமக்கள் வெளிநாட்டிலிருக்கும் தங்கள் துணையை பிரிட்டனிற்கு அழைத்து வரவேண்டுமானால் அதற்கு குறைந்த பட்ச ஊதியத்தை நிர்ணயிக்கும் அரசின் உரிமையை பிரிட்டன் உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

பிரிட்டனிற்கு தங்கள் துணையை அழைத்துவர குறைந்த பட்ச ஊதிய நிர்ணயம் அறிவிப்பு

பட மூலாதாரம், Getty Images

ஐந்து வருடங்களுக்கு முன் கொண்டுவரப்பட்ட அந்த விதியில், ஒருவர் தனது மனைவி அல்லது கணவரை பிரிட்டனிற்கு அழைத்து வர வேண்டும் என்றால் அவர் 23,000 டாலர்களுக்கு மேல் ஊதியம் பெற வேண்டும்.

பல ஐரோப்பிய குடிமக்களுக்கு இது பொருந்தாது.

நீதிபதிகளில் ஒருவரான கார்ன்வாத், தம்பதிகள் பொதுநல உதவிகளை நாடாமல் பிரிட்டனில் முழுமையாக தங்கள் வாழ்வை வாழ்வதற்கான போதிய வளங்களை பெற்றிருக்க வேண்டும் என்பதே என இந்த முடிவின் சட்டரீதியான நோக்கம் என தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்