இது புதையல் வேட்டை நேரம் - காணொளி

இது புதையல் வேட்டை நேரம் - காணொளி

சங்கேதக் குறிகளை வைத்து புதையல் தேடும் நேரம் இது.

கிழக்கு இங்கிலாந்தில் உள்ள ஒரு நகரத்தின் தெருக்களில் பல ஆயிரம் டாலர்கள் பெறுமதியான தங்கப் பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளன.

ஒரு கலைத்திட்டத்தின் ஒரு பகுதிதான் இது. அங்கிருக்கும் ஓவியம் ஒன்றில் மறைந்திருக்கும், நாட்டின் மிகச்சிறந்த சங்கேத குறி எழுதிகளால் வடிக்கப்பட்ட, சங்கேதக் குறிகளை உடைத்தறிந்து, அதன் உதவியுடன் இந்த புதையலை கண்டுபிடிக்க வேண்டும்.

இவை குறித்த பிபிசியின் காணொளி.