பூமியின் அளவை கொண்ட ஏழு கிரகங்கள் கண்டுபிடிப்பு

ஒரு நட்சத்திரத்தை சுற்றிக்கொண்டிருக்கும் பூமியின் அளவை கொண்ட ஏழு கிரகங்களை வானியல் ஆறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.

அக்கிரகங்களில் திரவ நீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

பட மூலாதாரம், ESO

படக்குறிப்பு,

அக்கிரகங்களில் திரவ நீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

அக்கிரகங்களில் உள்ள பிற பண்புகளை பொறுத்து அவைகளின் மேற்பரப்பில் திரவ நீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஆனால், ஏழு கிரகங்களில் மூன்றில் மட்டுமே, வழக்கமாக வாழக்கூடிய மண்டலங்களுக்குள் வருகின்றன. அதில்தான் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு இருப்பதாகக் கருதப்படுகிறது.

பூமியிலிருந்து 40 ஒளி ஆண்டுகள் தூரத்தில் அமைந்துள்ள குளிர் நட்சத்திரம்தான் டிராபிஸ்ட்-1. நிறை குறைந்த இந்த நட்சத்திரத்தைத்தான் இந்த ஏழு கிரகங்கள் சுற்றிக் கொண்டிருக்கின்றன.

படக்குறிப்பு,

பூமியிலிருந்து 40 ஒளி ஆண்டுகள் தூரத்தில் அமைந்துள்ள குளிர் நட்சத்திரம்தான் டிராபிஸ்ட்-1

இந்த கிரகங்கள் நாசாவின் ஸ்பிட்சர் விண்வெளி தொலைநோக்கியின் உதவியோடும் மற்றும் பல நிலம் சார்ந்த ஆய்வுகளின்படியும் கண்டறியப்பட்டுள்ளதாக நேச்சர் என்ற சஞ்சிகையில் விவரிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின் மூத்த ஆசிரியரான பெல்ஜியம் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மிக்கெல் கில்லான் கூறுகையில், கிரகங்கள் ஒன்றோடு ஒன்று மிகவும் நெருக்கமாக இருப்பதாகவும், நட்சத்திரத்தோடும் மிக நெருக்கத்தில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

பட மூலாதாரம், NASA

படக்குறிப்பு,

டிராபிஸ்ட்-1 குறித்து நாசா தயாரித்துள்ள பயண போஸ்டர்

மேலும், இந்த நட்சத்திரம் மிகவும் சிறியது மற்றும் குளிர்ச்சியானது என குறிப்பிட்டுள்ள அவர், இதன் காரணமாக கிரகங்களும் மிதமான தட்ப வெட்ப நிலையில் இருக்கும் என்றும், திரவ தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளும், மேற்பரப்பில் உயிரினங்கள் இருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆய்வின் துணை ஆசிரியரான ஐக்கிய ராஜ்ஜியம் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த அமோரி ட்ரியாட் கூறுகையில், தங்கள் குழு மிதமான என்பதற்கு விளக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும், இது உயிர்களின் வாழ்வியல் குறித்த கருத்துக்களை விரிவுபடுத்த உதவும் என்றும் கூறியுள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்