டிரம்ப் உத்தரவால் பள்ளி கழிவறைகளை பயன்படுத்துவதில் திருநங்கை மாணவர்களுக்கு சிக்கல்

அமெரிக்காவில் திருநங்கை மாணவர்களுக்கு ஆதரவாக ஒபாமா அதிபராக இருந்த போது தரப்பட்ட வழிகாட்டல்கள் டிரம்ப் நிர்வாகத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

ஒபாமாவின் உத்தரவு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது : வெள்ளை மாளிகை

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு,

ஒபாமாவின் உத்தரவு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது : வெள்ளை மாளிகை

ஒபாமா அதிபராக இருந்த போது, திருநங்கை மாணவர்கள் தங்கள் பாலின அடையாளத்தை கொண்டு கழிவறைகளை பயன்படுத்த அனுமதிக்குமாறு அரசு பள்ளிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஆனால், இந்த வழிகாட்டல் அரசு தேவையற்ற வகையில் ஒரு விஷயத்தில் மூக்கை நுழைக்கும் ஒரு அதீத நடவடிக்கை என்றும், இது மற்ற மாணவர்களின் அந்தரங்கம் மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவித்துள்ளதாகவும் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்றைய தினம் (புதன்கிழமை) அமெரிக்காவில் உள்ள பள்ளிகளுக்கு இந்த மாற்றம் குறித்து அனுப்பப்பட்ட கடிதம் ஒன்றில், ஒபாமாவின் உத்தரவு குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பதாக தெரிவித்துள்ளது.

நடைமுறையில் இதுபோன்ற உத்தரவுகள் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்த விவாதங்கள் மற்றும் வழக்குகளை ஒபாமாவின் உத்தரவு தூண்டியுள்ளதாக நீதித்துறை மற்றும் கல்வித்துறைகள் தெரிவித்துள்ளன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்