சிறையில் அடைக்கப்பட்ட போலீஸாருக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான போலீஸார் ஹாங் காங்கில் பேரணி

ஹாங் காங்கில் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட ஏழு போலீஸாருக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான போலீஸ் அதிகாரிகள் ஆதரவு பேரணி ஒன்றை நடத்தியுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஆயிரக்கணக்கான போலீஸார் ஹாங் காங்கில் பேரணி

2014 ஆம் ஆண்டில் ஜனநாயக ஆதரவு போராட்டங்களின் போது கைவிலங்கிடப்பட ஆர்ப்பாட்டக்காரரை அடித்ததற்காக கடந்த வாரம் ஏழு போலீஸாருக்கு இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த தண்டனை பல அதிகாரிகள் கோபப்படுத்தியது. இது நியாயமற்றது என்றும், மிகவும் கடுமையானது என்றும் அதிகாரிகள் நம்புகின்றனர்.

நேற்று (புதன்கிழமை) இரவு போலீஸ் பொழுதுபோக்கு மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் சுமார் 33 ஆயிரம் பேர் கலந்து கொண்டதாக நிகழ்வை ஒருங்கிணைத்த போலீஸ் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிகாரிகள் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்து அவர்கள் மீதான களங்கத்தை போக்க உதவப்போவதாக ஒருங்கிணைப்பாளர்கள் கூறியதாக அங்குள்ள செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்