அதிக நேரம் தூங்கினால் நினைவாற்றல் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு : ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை

வழக்கமாக அதிக நேரத்தூக்கம் தேவைப்படாமல், இரவில் ஒன்பது மணி நேரங்களுக்கும் அதிகமாக தூங்கத் தொடங்கும் வயது வந்தவர்கள் அல்சைமர்ஸ் எனப்படும் நினைவாற்றல் பாதிப்பு நோயின் ஆரம்ப அறிகுறிகளை வெளிக்காட்டலாம் என புதிய ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

கோப்புப்படம்

பட மூலாதாரம், Kevin Frayer

படக்குறிப்பு,

கோப்புப்படம்

அறுபது வயதை கடந்தவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், ஒன்பது மணி நேரங்களுக்கும் அதிகமாக வழக்கமாக தூங்கியவர்களுக்கு இந்த நோயால் பாதிக்கப்படும் வாய்ப்புகள் இரட்டிப்பாகும் சாத்தியக்கூறுகள் அதிகம் என்று கூறப்பட்டுள்ளது.

எவ்வளவு மணி நேரங்கள் தூங்குகிறார்கள் என்று பொதுமக்களிடம் கருத்து கேட்பது டிமென்ஷிய எனப்படும் மனநோய் பாதிப்பு ஏற்படுவதற்கான அதிக அபாயம் இருப்பவர்களை அடையாளம் காண்பதில் உதவியாக இருக்கும் என்றும் அமெரிக்காவில் உள்ள போஸ்டன் பல்கலைக்கழகத்தை ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்