மோசூலின் மேற்குப் பகுதியில் ஐ.எஸ் தீவிரவாதிகளை விரட்டும் முயற்சிகள் தீவிரம்

இராக்கின் முக்கியமான நகரான மோசூலின் மேற்குப் பகுதியில் இருந்து ஐ.எஸ் தீவிரவாதிகளை வெளியேற்றும் முயற்சியில், முக்கிய இலக்கான மோசூல் விமானநிலையத்திற்குள், இராக்கிய பாதுகாப்புப் படையினர், போராடி நுழைந்துள்ளனர்.

மோசூலின் மேற்குப் பகுதியில் ஐ.எஸ் தீவிரவாதிகளை விரட்டும் முயற்சிகள் தீவிரம்

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்க கூட்டணிப்படைகள் இரவு முழுவதும் வான் வழித் தாக்குதல்களை நடத்தி இந்த தாக்குதலை தொடங்கிவைத்த நிலையில், விமானநிலைய எல்லைக்குள், தரைப்படைகள் நுழைந்துவிட்டன.

அங்கு, பல கட்டிடங்களை தங்கள் வசம் வைத்திருக்கும் தீவிரவாதிகளுடன் கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐ.எஸ் குழுவினர், விமானநிலைய ஓடுதளத்தை சேதப்படுத்தி இருந்தாலும், இத்தகைய ஒரு பெரிய இடத்தைக் கைப்பற்றுவதன் மூலம், தெற்குப் பகுதியிலிருந்து மோசுலுக்குள் வரும் பாதைகளை இராணுவம் தனது கட்டுப்பாட்டிற்குள் எடுத்துவிடும்.

மோசூலில் கிழக்கு பகுதியில் பாதிக்கும் மேற்பட்ட இடங்களை அரசு படைகள் கடந்த மாதமே தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்