90 வயது தாண்டி வாழும் தென்கொரிய பெண்கள்

90 வயது தாண்டி வாழும் தென்கொரிய பெண்கள்

உலகெங்கும் மக்களின் ஆயுட்காலம் அதிகரித்து வருகின்றது. இதற்காக மருத்துவ சுகாதார சிகிச்சைகளுக்கும், உடற்பயிற்சிக்கும் நல்ல உணவுக்கும் நாம் நன்றி சொல்ல வேண்டும்.

இப்போது முப்பத்தைந்து தொழில்வள நாடுகளில் நிலைமை குறித்த ஆய்வு அறிக்கை வந்துள்ளது.

ஆண், பெண் இருபாலாருக்கும் அதிக ஆயுட்காலத்தை தரும் நாடாக தென்கொரியா இருக்கின்றது.

பெண்கள்தான் உலகில் அதிக ஆண்டுகள் வாழ்கிறார்கள்.

இந்த மாற்றங்களுக்கு பெருமளவு சுகாதார துறையில் செய்யப்படும் முதலீடுகளே காரணம் என்று உலக சுகாதார நிறுவனமும் லண்டன் இம்பீரியல் கல்லூரியும் நடத்திய ஆய்வு கூறுகின்றது.