கிம் ஜாங் நம்மைக் கொன்றது மிக மோசமான வி.எக்ஸ் ரசாயனம் - மலேசியா

  • 24 பிப்ரவரி 2017

வட கொரிய தலைவரின் சகோதரர் கிம் ஜாங் நம், நரம்புகளை தாக்கி உயிராபத்தை விளைவிக்கும் உலகின் மிக மோசமான ரசாயனத்தை பயன்படுத்தி, மலேசியாவின் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் கொல்லப்பட்டார் என்று மலேசிய காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்த ரசாயனம் ஐ.நா.வால் வி.எக்ஸ் பேரழிவு ஆயுதம் என்று வகைப்படுத்தப்பட்டது ; அதன் நூறில் ஒரு கிராம் பங்கே ஒரு நபரைக் கொல்வதற்குப் போதுமானது .

தாக்குதல் நடந்த 11 நாட்களுக்கு பிறகு, அந்த ரசாயனத்தின் எஞ்சியுள்ள துகள்கள் உள்ளனவா என்று விமான நிலையத்தில் சோதனை நடத்திவருவதாக, மலேசிய அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் கதிரியக்கப் பொருட்கள் உள்ளதா என்றும் சோதனை செய்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல் நடத்திய இரண்டு பெண்களில் ஒருவர் கிம் ஜாங் நம்மை தாக்கிய பிறகு, வாந்தி எடுத்ததை சிசிடிவி பதிவில் பார்த்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்