ரகசிய ஆவணங்கள் திருட்டு : உபெர் மீது வழக்குத் தொடர்ந்த கூகுள்

கூகுள் நிறுவனத்திடமிருந்து வர்த்தக ரகசியங்கள் மற்றும் தொழில்நுட்பத்தை திருடியதற்காக உபெர் நிறுவனம் மீது கூகுள் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.

வேமோ

பட மூலாதாரம், WAYMO

படக்குறிப்பு,

கூகுளின் உரிமையாளரான ஆல்ஃபபெட் உருவாக்கியதுதான் வேமோ

கூகுளின் உரிமையாளரான ஆல்ஃபபெட் உருவாக்கிய வேமோ, உபெரின் தானியங்கி வாகன நிறுவனமான ஓட்டோவை எதிர்த்து சட்ட ரீதியான நடவடிக்கையை எடுத்துள்ளது.

உபெர் ஓட்டோவை கடந்த ஆண்டு சுமார் 700 மில்லியன் டாலருக்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது.

வேமோவின் முன்னாள் மேலாளரான ஆண்டனி லெவண்டோஸ்க்கி நிறுவனத்தை விட்டு விலகி கூட்டாக புதிய நிறுவனத்தை தொடங்க வெளியேறிய போது பல தகவல்களை எடுத்து சென்றுவிட்டதாக இந்த சட்ட வழக்கு சுட்டிக்காட்டுகிறது. இந்த நிறுவனம்தான் பின்னர் ஓட்டோ என்ற நிறுவனமானது.

பட மூலாதாரம், WAYMO

படக்குறிப்பு,

இந்த விவகாரத்தை மீளாய்வு செய்யப்போகிறோம் ; உபெர்

இந்த குற்றச்சாட்டுக்களை தீவிரமாக எடுத்துக்கொள்ள போவதாகவும், இந்த விவகாரத்தை மீளாய்வு செய்யப்போவதாகவும் ஊபர் தெரிவித்துள்ளது.

லெவண்டோஸ்க்கி கூகுள் நிறுவனத்தின் ஊழியராக இருந்த போது, 14 ஆயிரம் மிகவும் ரகசியமான மற்றும் நிறுவனத்துக்கு சொந்தமான வடிவமைப்பு ஆவணங்களை எடுத்து சென்றிருப்பதாக அந்த சட்ட வழக்கு குற்றஞ்சாட்டுகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்