துருக்கி ராஜிய பாஸ்போர்ட்டுடன் 136 பேர் ஜெர்மனியிடம் தஞ்சம் கோருவதாக தகவல்

துருக்கி அதிபருக்கு எதிராக ஜூலை மாதம் நடைபெற்ற ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கைக்கு பிறகு, ராஜிய கடவுச்சீட்டு வைத்திருக்கும் 136 பேர், ஜெர்மனியிடம் அரசியல் தஞ்சம் கோரியிருக்கின்றனர் என்று ஜெர்மனி கூறுகிறது.

துருக்கி அதிபர் ரெசெப் தய்யிப் எர்துவான்

பட மூலாதாரம், Getty Images

2016 ஆகஸ்டு முதல் 2017 ஜனவரி வரையிலான காலகட்டத்தில் இந்த கோரிக்கைகள் வந்திருப்பதாக ஜெர்மன் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

துருக்கி அதிபருக்கு எதிராக ஜூலை மாதம் நடைபெற்ற ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கைக்கு பிறகு, இராஜாங்க கடவுச்சீட்டு வைத்திருக்கும் 136 பேர், ஜெர்மனியிடம் அரசியல் தஞ்சம் கோரியிருக்கின்றனர்.

2016 ஆகஸ்டு முதல் 2017 ஜனவரி வரையிலான காலகட்டத்தில் இந்த கோரிக்கைகள் வந்திருப்பதாக ஜெர்மன் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ராணுவ அதிகாரிகள் எவருக்கும் தஞ்சம் அளிக்கக்கூடாது என்று துருக்கி, ஜெர்மனியை வலியுறுத்தியிருக்கிறது.

நேட்டோ ராணுவ தளங்களில் பணியமர்த்தப்பட்டிருப்பவர்களும் தஞ்சம் கோரியவர்களில் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

கிரேக்க நாட்டிடம் மேலும் இரு துருக்கிய சிப்பாய்கள் அடைக்கலம் கோரியிருக்கின்றனர்.

துருக்கி அதிபர் ரெசெப் தய்யிப் எர்துவானின் ஆட்சியை கவிழ்க்க தோல்வியில் முடிவடைந்த முயற்சிகளை மேற்கொண்டவர்களில் இவர்கள் இருவரும் அடங்குவர் என நம்பப்படுகிறது.

தற்போது கிரேக்க நாட்டு காவல்துறையின் காவலில் இருக்கும் இவர்கள் இருவரும், துருக்கியின் அருகில் இருக்கும் சிறிய எல்லை கிராமமான ஒரெஸ்டியாடாவில் தஞ்சம் கோரி கடந்த வாரம் விண்ணப்பித்தனர்.

ஆடசிக்கவிழ்ப்பில் ஈடுபட்டு பின் துருக்கியை விட்டு தப்பியோடிய, வேறு எட்டு துருக்கிய படையினரை ஒப்படைக்கக் கோரிய துருக்கியின் வேண்டுகோளை கடந்த மாதம் கிரேக்க நாட்டு நீதிமன்றம் ஒன்று நிராகரித்தது. அதை எதிர்த்து, துருக்கி மேல் முறையீடு செய்யவுள்ளது.

தற்போது அடைக்கலம் கோரியுள்ள 136 பேர் யார் என்ற விவரங்களை ஜெர்மன் உள்துறை அமைச்சகம் வெளியிடவில்லை.

தூதரக அதிகாரிகள் மட்டுமன்றி அவர்களின் துணைகள் மற்றும் குழந்தைகளும் இராஜாங்க கடவுச்சீட்டுகளை வைத்துள்ளனர்.

இதுவரை யாருக்காவது தஞ்சம் அளிக்கப்பட்டதா என்ற தகவலும் தெளிவாக தெரியவில்லை.

மூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்