ஊழல் குற்றச்சாட்டு விசாரணையில் போலீஸுக்கு ஒத்துழைக்க மறுக்கும் ஃபிரான்ஸ் அதிபர் வேட்பாளர்

ஃபிரான்சில் குடியேற்றத்திற்கு எதிரான அதிபர் வேட்பாளரான மெரின் லி பென், தன்னுடைய பணியாளர்களில் மூத்த உறுப்பினர்களுக்கு சட்ட விரோதமாக பணம் செலுத்தினார் என்று குற்றம்சாட்டப்பட்ட நிலையில், அதுதொடர்பாக போலீஸாரின் விசாரணைக்கு உட்பட மறுப்பு தெரிவித்துள்ளார்.

மெரின் லி பென்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

மெரின் லி பென்

இந்த குற்றச்சாட்டுக்களை மறுக்கும் லீ பென், தன்னுடைய தேர்தல் வாய்ப்புகளை முறியடிக்கும் நோக்கில் இந்த விசாரணைக்கான அழைப்பாணை வடிவமைக்கப்பட்டுள்ளதாக கருத்து தெரிவித்துள்ளார்.

லீ பென்னின் கட்சியியான தி நேஷனல் ஃபிரான்ட், ஐரோப்பிய நாடாளுமன்ற நிதியை எடுத்து ஃபிரான்ஸில் அவருடைய கட்சி மேற்கொண்டிருந்த பணிகளுக்காக மூத்த அதிகாரிகளுக்கு வழங்கினார் என்பே ஊழல் குற்றச்சாட்டின் முக்கிய அம்சம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்