சிரியாவில் தற்கொலை குண்டுதாரி நடத்திய தாக்குதலில் 60 பேர் கொலை
சிரியாவில் உள்ள அப்-பாப் நகரம் ஐ.எஸ் தீவிரவாதிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட நிலையில், அதற்கு மறுநாள் அந்நகருக்கு அருகே தற்கொலை குண்டுதாரி ஒருவர் நடத்திய தாக்குதலில் டஜன் கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

பட மூலாதாரம், Getty Images
அப்-பாப் நகர் அருகே தற்கொலை குண்டுதாரி நடத்திய தாக்குதலில் 60 பேர் கொலை
அல்-பாப் நகரின் வடகிழக்குப் பகுதியில் உள்ள சூசியன் கிராமத்தில், தாக்குதல்தாரி வெடிகுண்டு நிரப்பிய காரை வெடிக்க வைத்ததில் 60 பேர் கொல்லப்பட்டதாகவும், 100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருப்பதாகவும் துருக்கியில் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் பொதுமக்கள். அவர்கள் அல்-பாப் நகருக்கு திரும்புவதற்காக சோதனைச்சாவடியை கடந்து செல்ல காத்துக் கொண்டிருந்தார்கள்.
சிலமணி நேரங்கள் கழித்து, அதே பகுதியில் இரண்டாவது குண்டுத்தாக்குதல் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதில், 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்