அமெரிக்கா : இந்தியர் சுட்டுக் கொல்லப்பட்டது இனவெறி தொடர்புடையதா என விசாரணை

அமெரிக்க மாகாணம் கான்சாஸில் மது அருந்தகத்தில் இந்தியர் ஒருவர் மீது நடத்திய தாக்குதல், இனவெறி தொடர்புடையதா என்று காவல்துறையினர் புலன் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஆடம் புரின்டோன்

பட மூலாதாரம், AP

படக்குறிப்பு,

சம்பவம் நடைபெற்று ஐந்து மணி நேரம் கழித்து ஆடம் புரின்டோன் கைது செய்யப்பட்டார்

புதன்கிழமையன்று இரவு ஒளத்தேயில் (Olathe) நெரிசல் மிகுந்த விடுதி ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் காயமடைந்தனர், அதில் ஒருவர் உயிரிழந்தார்.

துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு முன்னதாக, தாக்குதல்தாரி இனவெறியைத் தூண்டும் வார்த்தைகளை கூறியதாக மது அருந்தக பணியாளர் ஒருவர் உள்ளூர் ஊடகத்திடம் தெரிவித்தார். இந்த சம்பவத்தில் இந்தியர் ஒருவரும் காயமடைந்தார்.

பட மூலாதாரம், FACEBOOK

படக்குறிப்பு,

ஸ்ரீனிவாஸ் குச்சிபூட்டலா (முதல் நபர்), அலோக் மாடாசானி மற்றும் இயன் கிரில்லாட் இத்தாக்குதலில் காயம் அடைந்துள்ளனர்

51 வயதான ஆடம் புரின்டோன், இந்த தாக்குதலை திட்டமிட்டு நடத்தியதாக குற்றம் சாட்டியுள்ள அமெரிக்க புலனாய்வு முகமை FBI, இதற்கான காரணத்தை ஆராய்ந்து வருகிறது.

31 வயதான ஸ்ரீனிவாஸ் குச்சிபூட்டலா என்பவர் இந்த தாக்குதலில் உயிரிழந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அவரது நண்பர் அலோக் மாடசாணி உடல்நிலை தேறிவருகிறார்.

பட மூலாதாரம், AUSTINS BAR & GRILL

படக்குறிப்பு,

அந்த விடுதி

இந்தச் சம்பவத்துக்கு இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்