வெள்ளை மாளிகை செய்தியாளர் சந்திப்பு: சில ஊடகங்களுக்குத் தடை

அமெரிக்க அதிபரின் அதிகாரபூர்வ அலுவலகமான வெள்ளை மாளிகையில் நடக்கும் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கலந்துகொள்வதில் இருந்து பல முக்கிய செய்தி நிறுவனங்கள் விலகப்பட்டுள்ளன.

வெள்ளை மாளிகையில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கலந்துகொள்வதில் இருந்து பல முக்கிய செய்தி நிறுவனங்கள் விலகப்பட்டுள்ளன.

பட மூலாதாரம், Getty Images

விலக்கப்பட்டுள்ள செய்தி நிறுவனங்களில், நியூயார்க் டைம்ஸ், சி என் என், பிபிசி மற்றும் லாஸ் ஏஞ்சலஸ் டைம்ஸ் ஆகியவை அடங்கும்.

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் செய்தித் தொடர்பாளர் , சீன் ஸ்பைசருடனான, கேமராக்களில் பதிவு செய்யப்படாமல், தனிப்பட்ட முறையில் நடக்கும் செய்தியாளர் சந்திப்பு ஒன்றுக்கு இந்த நிறுவனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது .

இந்த முடிவுக்கு செய்தியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது, சீன் ஸ்பைசர் தவறான செய்திகள், தவறான வர்ணனைகள் மற்றும் தவறான தகவல்கள் வெளியாவதை தான் அமைதியாக அமர்ந்து பார்த்துக்கொண்டு இருக்கமுடியாது என்று அவர் தெரிவித்தார்.

நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையை விலக்கிவைப்பது இந்த பத்திரிகையின் வரலாற்றில் இதுதான் முதல் முறை என அதன் நிர்வாக ஆசிரியர் டீன் பாக்யுட் தெரிவித்துள்ளார்.

வெளிப்படையாக ஆட்சி நடத்தும் ஒரு அரசை, ஊடகங்கள் தங்கு தடையின்றி அணுக முடிவது என்பது தேச நலனுக்கு முக்கியமானது என்றார் அவர்.

மூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்