குவாடமாலா கடற்பரப்பில் கருக்கலைப்பு செய்ய வந்த அமைப்பினர் வெளியேற்றம்

கர்ப்பகாலத்தின் ஆரம்ப காலத்தில் இருக்கும் பெண்களுக்கு இலவசமாக கருக்கலைப்பு செய்வதாக கூறி, குவாடமாலா நாட்டிற்கு புதன் அன்று படகில் வந்த, நெதர்லாந்து நாட்டை சேர்ந்த ஒரு நிறுவன உறுப்பினர்களை குவாடமாலா அதிகாரிகள் வெளியேற்றினர்.

படத்தின் காப்புரிமை Getty Images

அந்த நபர்கள் சுற்றுலா விசாவை வைத்திருந்தனர். அவர்கள் குவாடமாலாவில் வேலை செய்ய அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பெண்களை படகுகளின் மூலம் சர்வதேசக் கடற்பரப்புக்குக் கொண்டு சென்று, சர்வதேச கடற்பரப்பில் எந்த சட்டத்தையும் மீறாமல் கருக்கலைப்பு செய்ய முடியும் என்று விமன் ஆன் வேவ்ஸ் (Women on Waves) என்ற ஒரு இலாப நோக்கற்ற அமைப்பு தெரிவித்திருந்தது.

குவாடமாலாவில் தாய்மார்களின் உயிருக்கு ஆபத்து என்ற நிலையில் மட்டும்தான் கருக்கலைப்பு அனுமதிக்கப்படும்.