சிறை தண்டனைக்கு தானாக சரணடைந்த கால்பந்துவீரரின் மகன்

பண மோசடி மற்றும் போதை மருந்து கடத்தல் குற்றங்களுக்கான சிறை தண்டனையை அனுபவிக்க, பிரேசில் நாட்டின் புகழ்பெற்ற கால்பந்து விளையாட்டு வீரர் பீலேவின் மகன் எடின்ஹோ தானாகவே வந்து சரணடைந்தார்.

பிரேசில் நாட்டின் புகழ்பெற்ற கால்பந்து விளையாட்டு வீரர் பீலே()இடது) அவரது மகன் எடின்ஹோ(வலது) கோப்புப்படம்

பட மூலாதாரம், AP

படக்குறிப்பு,

பிரேசில் நாட்டின் புகழ்பெற்ற கால்பந்து விளையாட்டு வீரர் பீலே()இடது) அவரது மகன் எடின்ஹோ(வலது) கோப்புப்படம்

சேன்டோஸ் கால்பந்து கிளப்பின் முன்னாள் தொழில்முறை கோல்கீப்பரான எடின்ஹோவுக்கு அளிக்கப்பட்ட 33 ஆண்டு கால சிறை தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ததால், அவர் விடுவிக்கப்பட்டார்.

தற்போது, சா பாலொ மாநில நீதிமன்றம் அவரது தண்டனை காலத்தை 12 ஆண்டுகளாக குறைத்துள்ளது. ஆனால் எடின்ஹோ சிறைக்கு மீண்டும் போக வேண்டும் என்று தெரிவித்திருந்தது.

சாண்டோஸ் நகரத்தில் உள்ள காவல் நிலையத்திற்கு வந்திருந்த எடின்ஹோ, தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்ததார்; அதற்கான எந்தவொரு ஆதாரமும் இல்லை என்றார்.

மூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்