அமெரிக்க உளவுத்துறை அறிக்கையை விமர்சிக்கும் அதிபர் டிரம்ப்

ஏழு இஸ்லாமிய நாடுகளை சேர்ந்த குடியேறிகள் அமெரிக்காவுக்கு வருவதற்கு தாற்காலிக தடையை அறிமுகம் செய்யும் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முயற்சிக்கு கசியவிடப்பட்ட தகவல் மூலம் சவால் விடப்பட்டுள்ளது.

அமெரிக்க அரசின் உள்நாட்டுபாதுகாப்பு துறை

பட மூலாதாரம், Getty Images

ஒரு நாட்டின் குடிமக்களாக இருப்பதாலேயே அவர்கள் தீவிரவாத நடவடிக்கையில் இருப்பதற்கான சாத்தியம் இருப்பதாக சொல்வது நம்பத்தக்க காரணியாக இருக்க வாய்ப்பில்லை என அமெரிக்க அரசின் உள்நாட்டுபாதுகாப்பு துறையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

உளவுத்துறையின் இந்த அறிக்கை அரசியல் நோக்கம் கொண்டதாகவும் மோசமாக ஆராயப்பட்டுள்ளது என்றும் கூறி இதை வெள்ளை மாளிகை மறுத்துள்ளது.

குடியேறிகள் அமெரிக்காவிற்கு வருவதற்குள்ள தடையை செயல்படுத்த உத்தரவிட அதிபர் டிரம்ப்பின் நிர்வாக ஆணையை, இந்த மதத்தின் தொடக்கத்தில், வாஷிங்டனில் உள்ள ஒரு பெடரல் நீதிபதி தடுத்துள்ளார்.

மூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்