சிரியாவின் ஹோம்ஸ் நகரில் நிகழ்ந்த தற்கொலைத் தாக்குதலில் 40 பேர் பலி

சிரியாவின் மூன்றாவது நகரமான ஹோம்ஸில் தற்கொலை குண்டுதாரிகள் இரு பாதுகாப்பு வளாகங்களில் நடத்திய தாக்குதலில் டஜன் கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

கோப்புப்படம்

பலியானவர்களில் ராணுவ உளவுப் பிரிவின் உள்ளூர் தலைவரும் அடங்குவார்.

இந்தத் தாக்குதலில் சுமார் 40க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளதாக சில தகவல்கள் கூறுகின்றன.

தொடர் தாக்குதல்களின் பின்னணியில் அல் கயீதாவுடன் முன்னர் தொடர்பில் இருந்த நூஸ்ரா ஃபிரான்ட் இருப்பதாக தெரிவித்துள்ளது.

தற்போது, அந்த அமைப்பு ஃபதே அல் ஷாம் என்று தற்போது தங்களை அழைத்துக் கொள்கிறது.

போர் நிறுத்த உடன்படிக்கையைத் தொடர்ந்து போராளிகள் ஹோம்ஸ் நகரை விட்டு சென்ற நிலையில், 2015 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் ஹோம்ஸ் நகரம் சிரியா அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்