இராக்கிய படையினர் மீது ஆளில்லா விமானம் மூலம் ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல்

மேற்கு மொசூலின் உள்பகுதிகளில் இராக்கிய படைகள் தீவிரமாக முன்னேறி வருகின்றன. ஆனால், ஐ.எஸ் போராளிகளின் கடுமையான எதிர்ப்பு அந்த வேகத்தைக் குறைத்துள்ளது.

மொசூல்

பட மூலாதாரம், Getty Images

ஆயுதமேந்திய ஆளில்லா விமானங்கள், கார் வெடிகுண்டுகள் மற்றும் ஸ்நைப்பர் துப்பாக்கிகளை கொண்டு ஐ.எஸ் குழுவினர் பதில் தாக்குதல் நடத்தி வருவதாக இராக் ராணுவ தளபதி ஒருவர் கூறியுள்ளார்.

மொசூலின் தென்மேற்கு முனையை ராணுவம் மீண்டும் கைப்பற்றியுள்ள நிலையில், இதனால் விநியோக பாதை தூரம் குறையும் மற்றும் நகரின் கிழக்கு பகுதியில் உள்ள படையினருடன் ஒரு தொடர்பு கிடைக்கும் என்பதால் படையினரின் முன்னேற்றமானது அதிகரிக்கும் என்று ராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

டைகிரீஸ் நதியைத்தாண்டி தென்கோடியில் அமைந்துள்ள பாலத்திலிருந்து ஒரு கி.மீட்டருக்கும் குறைவான தூரத்திலே இராக்கிய படைகள் இருப்பதாக மற்றொரு ராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்