ஆஃப்கானிஸ்தான் : 10 போலீஸ் அதிகாரிகள் சுட்டுக்கொலை

வட ஆஃப்கானிஸ்தானில் உள்ள ஜாஸ்ஜன் மாகாணத்தில் ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் குறைந்தது 10 போலீஸ் அதிகாரிகளும் மற்றும் தளபதி ஒருவரின் மனைவியும் கொல்லப்பட்டுள்ளதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோப்புப்படம்

பட மூலாதாரம், Chris Hondros

படக்குறிப்பு,

கோப்புப்படம்

நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை) மசூதி ஒன்றிலிருந்து வெளியே வந்த அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தனது கணவர் சுடப்பட்டார் என்ற செய்தியை கேட்டு சம்பவ இடத்துக்கு சென்ற பெண்ணும் சுட்டுக்கொல்லப்பட்டதாக மாகாண ஆளுநரின் பேச்சாளர் முகமது ரீஸா கஃபோரி கருத்து தெரிவித்துள்ளார்.

கிழக்கு ஆஃப்கானிஸ்தானில் ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய தீவிரவாதிகள் தீவிரவாக செயல்பட்டு வருகின்றனர்.

ஆனால், சமீபத்தில் வடக்கிலும் அவர்கள் தாக்குதலை தொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்