அமெரிக்கா : இந்தியர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு இனவெறிதான் காரணமா - இந்தியா அதிர்ச்சி

அமெரிக்காவில் இந்தியர் ஒருவர் கொல்லப்பட்ட துப்பாக்கிச்சூட்டிற்கு இனவெறி காரணம் என்று வெளிவந்திருக்கும் தகவல்களை அடுத்து இந்தியா அதிர்ச்சி வெளியிட்டுள்ளது.

ஸ்ரீனிவாஸ் குச்சிபூட்டலா (முதல் நபர்), அலோக் மாடாசானி மற்றும் இயன் கிரில்லாட் இத்தாக்குதலில் காயம் அடைந்துள்ளனர்

பட மூலாதாரம், FACEBOOK

படக்குறிப்பு,

ஸ்ரீனிவாஸ் குச்சிபூட்டலா (முதல் நபர்), அலோக் மாடாசானி மற்றும் இயன் கிரில்லாட் இத்தாக்குதலில் காயம் அடைந்துள்ளனர்

புதன்கிழமையன்று இரவு ஒலத்தேயில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில், ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லா என்ற இந்தியர் உயிரிழந்தார். இந்த துப்பாக்கிச்சூட்டில் ஸ்ரீனிவாசின் நண்பரும், இந்தியருமான அலோக் மாடசாணி மற்றும் ஒரு அமெரிக்கரும் காயமடைந்தனர்.

ஆடம் புரின்டோன் என்ற அமெரிக்கர், திட்டமிட்டு இந்தக் கொலையை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

பட மூலாதாரம், AP

படக்குறிப்பு,

சம்பவம் நடைபெற்று ஐந்து மணி நேரம் கழித்து ஆடம் புரின்டோன் கைது செய்யப்பட்டார்

இந்தக் கொலை தொடர்பான தகவல்கள் இந்திய செய்தி அறிக்கைகளிலும், சமூக ஊடகங்களிலும் பெருமளவு கவனம் பெற்றுள்ள நிலையில், சிலர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தலைமையை சாடியுள்ளனர்.

ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லா, மிகவும் அன்பானவர் என்று அவரது மனைவு சுனைன்னா துமாலா கூறுகிறார்.

அமெரிக்காவை தனது கணவர் மிகவும் விரும்பியதாக செய்தியாளர் கூட்டத்தில் கூறிய சுனைன்னா , இந்த துப்பாக்கிச்சூடு வெறுக்கத்தக்க குற்றம் என்று குறிப்பிட்டார்.

படக்குறிப்பு,

ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லா, மிகவும் அன்பானவர் : சுனைன்னா துமாலா

எந்த ஒரு உயிரிழப்பும் வருந்தத்தக்கது என்று தெரிவித்த வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் சியான் ஸ்பைசர் (Sean Spicer), ஆனால் இதில் அதிபர் டிரம்பை இணைத்து பேசுவது மிகைப்படுத்தப்பட்ட செயல் என்று தெரிவித்தார்.

"ஆஸ்டின்ஸ் பார் அண்ட் கிரில்ஸ்" என்ற மது அருந்தகத்தில் நடைபெற்ற இந்தத் தாக்குதலுக்கு சாத்தியமான காரணங்களை அமெரிக்க புலனாய்வு முகமை FBI, ஆராய்ந்து வருகிறது.

துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு முன்னதாக, "என் நாட்டை விட்டு வெளியேறு" என்று தாக்குதல்காரர் கத்தியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர் தெரிவித்தார்.

புதன்கிழமை நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சூட்டுக்கு முன்னதாக, இனவெறியைத் தூண்டும் வார்த்தைகளை தாக்குதல்காரர் கூறியதாக மது அருந்தக பணியாளர் ஒருவர் உள்ளூர் ஊடகத்திடம் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்