அடுத்த தேர்தலிலும் களமிறங்குவதாக 93-வது பிறந்த நாள் விழாவில் ராபர்ட் முகாபே அறிவிப்பு

ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே 93 வது பிறந்த நாளை கொண்டாடினார்.

ஜிம்பாப்வே அதிபர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபேவுக்கு 93 வயதாகிறது.

புலாவாயோவின் புறநகர் பகுதியில் நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டங்களில் அரசு ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

ஜிம்பாப்வேயில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவும் நேரத்தில், ஒரு வார காலம் நீடிக்கும் ஆடம்பர பிறந்தநாள் கொண்டாட்டங்களை ஆர்வலர்கள் மற்றும் எதிர்கட்சித் தலைவர்கள் விமர்சித்துள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images

1980 ஆம் ஆண்டு முதல், அதிகாரத்தில் இருக்கும் அதிபர் ராபர்ட் முகாபே, அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் தேர்தலிலும் போட்டியிடப்போவதாக சொல்கிறார்.

ராபர்ட் முகாபேவை அடுத்து, யார் தேர்தலில் போட்டியிடுவது என்பது குறித்து ஆளும்கட்சியான ZANU-PF -ல் உட்பூசல் நிலவிவந்த நிலையில், தனது இடத்தை யாரும் நிரப்ப முடியாது என்று கடந்த வார இறுதியில்குறிப்பிட்டிருந்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்