கூகுள் நிறுவனத்திற்கு ரஷ்யா கடும் எச்சரிக்கை

கூகுள் நிறுவனம் சட்டத்துக்கு இணங்க மறுக்கும் பட்சத்தில் விரும்பத்தகாத பல ஆச்சரியங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று ரஷ்யாவின் ஏகபோக உரிமைக்கு எதிரான மத்திய அமைப்பின் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கூகுள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

கூகுள் நிறுவனம் சட்டத்துக்கு இணங்க மறுக்கும் பட்சத்தில் விரும்பத்தகாத பல ஆச்சரியங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் : ரஷ்யாவின் ஏகபோக உரிமைக்கு எதிரான மத்திய அமைப்பு

கடந்த ஆண்டு, தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் அதன் ஆண்ட்ராய்ட் மொபைல் இயங்கு அமைப்பை கொண்டு தன் சந்தைப்பகுதியை தவறாக பயன்படுத்தியதாக ரஷ்ய நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்திருந்தது.

ரஷ்யாவின் மிகப்பெரிய தேடுதளமான யாண்டெக்ஸ் உள்பட கூகுள் நிறுவனத்தின் போட்டி தேடு தளங்களுக்கு தடை விதித்து கூகுள் தயாரிப்புகளை தனது உற்பத்தி நிலையிலேயே சேர்க்க உற்பத்தியாளர்களை கட்டாயப்படுத்தியது ஆகியன இதில் அடங்கும்.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள கூகுள் மேல்முறையீடு செய்துள்ளது.

கடந்த ஆண்டு இதே போன்று கூகுளுக்கு எதிராக ஐரோப்பிய கமிஷன் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்