வங்கதேசத்தில் கடந்த ஆண்டு கைதான ஆடை தொழிலாளர்கள் விடுவிப்பு

வங்கதேசத்தில், ஊதியம் தொடர்பான விவகாரங்கள் காரணமாக கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட ஆயத்த ஆடைத்துறை தொழிலாளர்களை, அந்த நாட்டு அரசு தற்போது விடுவிப்பதாக உலக தொழிற்சங்கமான IndustriALLதெரிவித்துள்ளது.

வங்கதேசத்தில் கடந்த ஆண்டு கைதான ஆடை தொழிலாளர்கள் விடுவிப்பு

பட மூலாதாரம், industriall

ஊதிய உயர்வு கோரி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆயிரக்கணக்கான ஆயத்த ஆடை தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்;

அப்போது 34 தொழிலாளர்களும், உள்ளூர் தொழிற்சங்கத் தலைவர்களும் கைது செய்யப்பட்டனர்.

டாக்காவில் விரைவில் நடைபெறவிருக்கும் முக்கியமான வணிக உச்சி மாநாட்டில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா முக்கிய பேச்சாளராக கலந்து கொள்ளவிருக்கும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து, எச்&எம், இண்டிடெக்ஸ் உள்ளிட்ட பல முன்னணி ஃபேஷன் நிறுவனங்கள் மாநாட்டைப் புறக்கணிப்பதாக எச்சரித்திருந்தன.

30 மில்லியன் டாலர் அளவிலான ஆயத்த ஆடைத்துறையை கொண்ட வங்கதேசத்தில் வணிக உச்சி மாநாடு, திட்டமிட்டபடி நடைபெறும் என்று உலக தொழிற்சங்கம் IndustriALL தெரிவித்துள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்