அமெரிக்க மக்களின் எதிரிகள் : முன்னணி ஊடகங்களை சாடும் டொனால்ட் டிரம்ப்

முன்னணி செய்தி ஊடகங்கள் மீதான அதிபர் டிரம்பின் அதிருப்தி வெளிப்பாட்டின் மேலும் ஓர் அறிகுறியாக, இந்தாண்டு வெள்ளை மாளிகை சார்பில் செய்தியாளர்களுக்கு வழங்கப்படும் விருந்தில் கலந்துகொள்ளப் போவதில்லை என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்த நிகழ்வின்போது, அதிபர் பாரம்பரியமாக, வழக்கத்தை விடுத்து, உற்சாகமாக உரை நிகழ்த்துவது வழக்கம்.

அதிபர் டொனால்ட் டிரம்ப் அடிக்கடி செய்தித்துறையின் ஒரு பிரிவினரை போலி செய்தி என்றும், அமெரிக்க மக்களின் எதிரிகள் என்றும் விமர்சித்து வருகிறார்.

கடந்த வெள்ளிக்கிழமையன்று, பிபிசி, சிஎன்என் மற்றும் தி நியூயார்க் டைம்ஸ் உள்பட பல செய்தி நிறுவனங்கள் அதிகாரப்பூர்வ வெள்ளை மாளிகை செய்தியாளர் கூட்டத்திலிருந்து விலக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்